HIS HOLINESS CHANDRASEKARENDRA SARASWATHI SWAMIGAL, the MAHAPERIYAVA of Kanchi Kamakoti
Peetam in one of his discourses enlightens us about the
performance of the last rites to the departed souls. Talking extensively on the need of the Pretha Samskaram,
HE questions, should we not offer due tribute to a person, who had done a lot of good deeds using his body?
Explaining in detail on this, an individual can perform lot
of yagas and yagnas himself to relate to his merits and
demerits (Papa and Punya) but cannot perform his final
yagna, the Antha Ishti where his body is offered back to
the Lord who created it. HE concludes that the body
which is the greatest creation of God
should be returned to HIM with due
respects after it is dead. While the relatives perform the final yagna, the last
rites, for the departed soul, HE questions the plight of the destitute or orphans who have no relatives. Under
these circumstances HE directs that it
is the responsibility of the members of
the society to perform the last rites of
such orphans. HE emphasizes that it is a sin to dispose
of the bodies without any rites as done by the authorities of Municipal and Panchayat.
In HIS words,
“Doing Paropakaram (social service) itself is equivalent
to performing Ashwamedha Yaga. And with that we can
get the grace of Ambal, I have still not told you which
Paropakaram gives the same benefits as that of performing an Ashwamedha Yaga! What Paropakaram is
that? The answer is Pretha Samskara. It is the most
supreme amongst all Paropakarams. Shastra says
“Anatha Pretha Samskarath Ashwamedha Phalam
Labet” When we help perform Pretha Samskara for orphaned or unclaimed bodies, it saves us from committing the impending sins and thus helps us help our own
selves too. On the death of an orphan, irrespective of
the religion or caste he belongs to, we must help is own
community in doing the Pretha Samskara rituals as stipulated for the community.
One should take special interest and liberally offer money and inputs to the bereaved family to carry out Pretha
Samskara rituals as per Shastras.
( Thus Spake The Divine … Volume 3)
மஹாபெரியவர், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சந்த்ரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், தன்னுடைய
சொற்பொழிவுகள் ஒன்றில் இறந்தவர்களின் ப்ரேத ஈமச்சடங்குகள் பற்றி விவரிக்கிறார். மேலும் ஒருவன்
அவனது வாழ்நாளில் தன்னுடைய சரீரத்தைக்கொண்டு நன்மைகள் செய்தானென்றால், அவனது
இறப்பிற்கு பிறகு அவனது சரீரத்திற்கு தகுந்த மரியாதை செய்வது நம் கடமை இல்லையா? என்று கேள்வி
எழுப்புகிறார். இதைப் பற்றி மேலும் விரிவாக பேசுகையில், ஒருவன் தன் பாப புண்ணியங்களை
சம்பாதிப்பதற்காக தன் வாழ்நாளில் பல யாகங்களை, ஸம்ஸ்காரங்களை செய்ய முடியும். ஆனால் இறந்த
பிறகு தன் உடலை அதைப் படைத்த கடவுளுக்கு திருப்பி கொடுக்கின்ற ‘அந்திய இஷ்டி’ ஸம்ஸ்காரத்தை
அவன் பண்ண முடியாது.
கடவுளின் மகத்தான படைப்பான இந்த சரீரத்தை தகுந்த மரியாதைகளுடன் திருப்பிக் கொடுக்க வேண்டும். இதை மற்றவர்கள்தான் செய்ய முடியும். பொறுப்பு அவர்களுக்குத்தான். இதை சரியாகச் செய்யாவிட்டால் பாபம். இந்த அந்திம யாகச்சடங்குகளை சந்ததியினரோ, உறவினர்களோ செய்து விடுவர். ஆனால் சந்ததியினரோ, உறவினர்களோ இல்லாத நிராதரவாக இறந்தவர்களின் கதி? இச்சூழ்நிலைகளில், இந்த பொறுப்பை சமூகத்தினரே ஏற்று செய்ய வேண்டியது அவர்களது கடமை என்று பணிக்கிறார். அப்படி சடங்குகளின்றி ஸரீரத்தை அடக்கம் செய்வது நம் ஸமூகத்துக்கே களங்கம், பாபம் என்கிறார்.
பரோபகாரங்களின் ஒன்றை பண்ணினால் அதுவே அஸ்வமேதத்துக்கு ஸமானம் என்று சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிறது என்றும் ஆகையால் இந்த பரோபகாரத்தைப் பண்ணிவிட்டால் நாம் அம்பாளின் பூரண அநுக்ரஹத்தைப் பெற்றுவிட முடியும் என்று இதற்கு பதில் சொன்னேன். ஆனால் இதுவரை அஸ்வமேதத்துக்கு ஸமமான பலனைத் தருகிற அந்த ஒரு பணியைச் சொல்லவில்லை. மற்ற எல்லாவற்றையும்விட உயர்ந்ததான அந்த பணி என்னவென்றால் அதுதான் அனாதை ப்ரேத ஸம்ஸ்காரம். “அநாத ப்ரேத ஸம்ஸ்காராத் அஸ்வமேத பலம் லபேத்”
பர-உபகாரமாக, செத்துப்போன இன்னொரு ஜீவனுக்கு இதனால் உதவி பண்ணும்போதே, நமக்குப் பாபம் வராமல் கடமையைச் செய்து, நமக்கும் உபகாரம் பண்ணிக்கொள்கிறோம். அநாதையாக ஒருவன் செத்துப்போனதாகத் தெரிந்தால், அவன் என்ன ஜாதியாக இருந்தாலும், அவனுடைய குலாசாரப்படி, அவனுடைய குலத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டு யதோக்தமான ஸம்ஸ்காரம் செய்வதற்கு பொருளுதவி பண்ண வேண்டும். இதற்காகப் பலர் சேர்ந்து பணம் போட்டு மனஸாரப் பணி புரிய வேண்டும். அவர்களும் அநாதை ப்ரேத ஸம்ஸ்காரம் உத்தமமான கைங்கர்யம் என்று ‘ஸ்பெஷல் இன்டரெஸ்ட்’ எடுத்துக் கொண்டு, இதற்காக தாராளமாகப் பொருளுதவி செய்ய வேண்டும்.
(தெய்வத்தின் குரல்….. பாகம் 3)
உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான்(று)
உடம்பினை யானிருந் தோம்புகின்றேனே.
कांची कामकोटी पीठ के पूर्व अध्यक्ष पूज्य परमाचार्य श्री चन्द्रसेकरेन्द्र सरस्वती स्वामी अपने प्रवचन में मृत शरीर के
अन्तिम संस्कार के महत्व की ओर ध्यान आकर्षित करते हुए समाजिक कर्तव्य को विस्तृत रुप से समझाते हैं। परमाचार्य
हमसे प्रश्न करते है कि जिस शरीर के द्वारा मनुष्य पुण्य कार्य करता है, उसी शरीर को मृत्यु के बाद उचित सम्मान देना
क्या हमारा कर्तव्य नहीं है?
इसके बारें मे विस्तृत रूप से कहते है कि मनुष्य अपने जीवन काल में पाप-पुण्य के सम्बंध मे अनेक हवन तथा यज्ञ आदि
कर सकते हैं , पर अपना अन्तिम यज्ञ अंत्येष्टि (शरीर को इसके रचयिता भगवान को वापस देने की विधि ) स्वयं नहीं कर
सकते।
यह शरीर भगवान की उत्तम सृष्टि है, देहांत के बाद उसे सम्मान पूर्वक वापस देना चाहिए। यह वापस देने का काम कोई
अन्य ही कर सकता है एवं यह दूसरों की ही जिम्मेदारी है। यदि विधिपूर्वक यह क्रिया न सम्पन्न हो तो पापकर्म कहलाता
है। अन्तिम संस्कार की विधि संतान या रिश्तेदार करते हैं । परन्तु जिसके सन्तान या रिश्तेदार न हो और वह अनाद हो,
उस स्थिति में यह काम समाज की जिम्मेदारी और कर्तव्य है। अन्तिम संस्कार के बिना देह दहन /दफन करने से समाज
को कलंक या पाप लग जाता है।
स्वामी जी के शब्दों में
शास्त्रों मे बताया गया है कि एक परोपकार (सामाजिक सेवा ) करना अश्वमेध यज्ञ करने के बराबर है और उसे करने से
भगवान का पूर्ण आशीर्वाद प्राप्त होता है। पर कौन-सा परोपकार करने से अश्वमेध यज्ञ के समान फल प्राप्त कर सकते हैं,
यह हमने अभी तक नहीं बताया । अनाद प्रेत संस्कार ही वह उत्तम परोपकार है। शास्त्रोक्त - "अनाद प्रेत संस्कार
अश्वमेध फलम लबेत" ।
परोपकार के रूप में दिवंगत आत्मा के देह संस्कार की मदद करने से हम अपना कर्तव्य निभाकर और पाप से बचकर
अपने आप का ही उपकार करते हैं।
यदि कोई अनाद होकर मृत्यु को प्राप्त हो, चाहे वह किसी भी जाति के हों , उनके कुल के लोगों के द्वारा प्रथानुसार सही
तरीके से संस्कार करने में आर्थिक सहायता करनी चाहिए ।
इसके लिए लोगों को संयुक्त रूप से धन एकत्र करके स्व-दायित्व से काम करना चाहिए। अनाद प्रेत संस्कार को उत्तम
सेवा समझकर विशेष रुचि लेते हुए सभी को उदारतापूर्वक आर्थिक सहायता करनी चाहिए।
(Translated in Hindi From “Thus Spake The Divine” in English)